சென்னை ஐஐடியில் மேலும் எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியது. அதனால் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு நேற்று முதல் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.அதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே அது ரெட்ஸ் பாட்டாக அறிவிக்கப்பட்டது. கேண்டீனில் இருந்து கொரோனா தொற்று பரவியுள்ளது. முறையான விதிமுறைகள் பின்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 8 பேருக்கு பாதிப்பு உறுதியாகி கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.