பிக்பாஸ்வீட்டில் இரண்டாவது நாளாக கோழிப்பண்ணை டாஸ்க் தொடர்கிறது .
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இதில் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும், நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் . இந்த டாஸ்க் கை ஹவுஸ்மேட்ஸ்கள் மிக அதிரடியாக விளையாடி வருகின்றனர். இன்றைய முதல் புரோமோ வில் பாலா ஷிவானியின் முட்டையை தொட்டுவிட்டதாக கூறுகிறார் .
#Day73 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/2WmBTXI3P6
— Vijay Television (@vijaytelevision) December 16, 2020
ஆஜித்தின் முட்டையை தொடுவதற்கு நரிக்கூட்டம் முயற்சிக்கிறது. மேலும் ஆரியிடம் அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகியோர் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்கின்றனர் . புரோமோவின் இறுதியில் அர்ச்சனா ‘தரமான சம்பவம் இருக்கு’ என்று கூறுகிறார். இதனால் அர்ச்சனா டீமில் உள்ளவர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் டாஸ்க்காக இது அமைந்துள்ளது . இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு எப்படிப்பட்ட ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.