புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வருகின்ற 4ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். விருப்பத்தின் அடிப்படையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகுப்புகளும் விருப்பத்தின் பேரிலேயே தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 4ஆம் தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புமே பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்கள். 18-ம் தேதியிலிருந்து முழுமையாக ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்களின் பள்ளி நேரம் வழக்கம் போல நடைபெறும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதற்கான முழுமையான அறிவிப்பு பின்னர் வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.