பிரபல வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ‘டைம் அப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லனாக மிரட்டி வந்த மொட்டை ராஜேந்திரன் காமெடி கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தார் . தற்போது இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் . ‘டைம் அப் ‘ என்ற படத்தில் ராஜேந்திரன் ஹீரோ , வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் .
இந்த படத்தை இயக்கியுள்ள மனு பார்த்திபனும் படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளாராம் . மேலும் இந்த படத்தில் லொள்ளு சபா மனோகர், ஆதித்யா கதிர், மோனிகா சின்ன கோட்லா ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.