Categories
மாநில செய்திகள்

“அடுத்த 48 மணி நேரத்தில்” 5 மாவட்டங்களில்…. மிரட்ட வரும் கனமழை – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்று இரு புயல் தாக்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே இன்றிலிருந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதியில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |