Categories
சினிமா தமிழ் சினிமா

சோம் செய்த செயல் … கோபத்தில் பொங்கி எழுந்த அர்ச்சனா… பரபரப்பா வெளியான இரண்டாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . போட்டியாளர்கள் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும் ,நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் . இந்த டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் புரோமோவில் இன்று தரமான சம்பவம் இருப்பதாக அர்ச்சனா கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அர்ச்சனாவின் அன்பு அணியில் உள்ள இருவர் மோதிக் கொள்கின்றனர். சோம் அர்ச்சனாவின் முட்டையை தொட்டுவிட்டதாக கேமரா முன் கூற, ‘இல்லை முட்டையை உடைத்து விட்டார்’ என்கிறார் அர்ச்சனா. இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் சோம் அர்ச்சனாவின் புகைப்படத்துடன் இருந்த முட்டையை தூக்கி எறிகிறார். இதனால் கடும்கோபம் அடைந்த அர்ச்சனா என் புகைப்படத்தை நீ எப்படி தூக்கி எறியலாம் ?என கத்துகிறார்.

Categories

Tech |