Categories
உலக செய்திகள்

பெண்களை ஊக்குவிக்க நினைத்தோம்…. இது தான் நாட்டை பின்தங்க செய்கிறது…குற்றம் சாற்றிய மேயர்…!!

பெண்களுக்கு பணியில் உயர்பதவி அதிகம் கொடுக்கப்பட்டதால் பாரிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சில் உள்ள பாரிஸ்  நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உயர் பதவி வகிக்கின்றனர்.   இது பாலின சமநிலையை பராமரிப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுகிறது என்று பாரிஸ் சேவை அமைச்சகம் கூறியுள்ளது.  ஒருபால் இனத்தவரை உயர் பதவிக்கு 60% அதிகம் நியமிக்க கூடாது என்ற சட்டம் 2013 இயற்றப்பட்டது. 2018 ஆம் வருடம் பெண்கள் 11 பேர் மற்றும் ஆண்கள் 5 பேரை உயர் பதவிகளில் நியமித்ததாக பாரிஸ் அரசாங்கத்தால் 90 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாரிஸ் மேயர் கூறியதாவது: இவ்வாறு அபராதம் விதிக்கப்படுவது நியாயமற்ற செயல் எனவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்று  செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நகர சபை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் தைரியம் மற்றும் உறுதி ஆகியவற்றுடன் பெண்கள் செயல்பட வேண்டும் என்பதை  ஊக்குவிப்பதற்காக தான் செய்தோம் என்றார். மேலும் இவ்வாறு குற்றம் சாட்டபடுவது தான் பிரான்சை பின்தங்க வைத்துள்ளது என்றும்  கூறியுள்ளார்.  பாரிஸ் நகரில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் உயர் பதவி வகிப்பதில் பெண்கள் 47% உள்ளனர். ஆனால் 2019 ஆம் வருடத்தில் இவ்விதி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அமிலி டி மாண்ட்சலின் கூறினார். இதுபற்றி அவர்  கூறும்போது  இந்த விவாதம் பற்றி மேலும் பேச பாரிஸ் மேயரை  பிரான்ஸ் பொது சேவை அமைச்சர் அழைத்துள்ளார்

Categories

Tech |