Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்கள் எச்சரிக்கை “3 நாட்களுக்கு அனல் காற்று” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி மாவட்டத்தின் கோடநாட்டில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாகவும் , கோவை, ஈரோடு, திருச்சியிலும் மழை பெய்துள்ளது என்றும் , சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  திருச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாக தெரிவித்தத்து. அந்த நேரத்தில் 1 மணிக்கு சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் , மழை பெய்யாத இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |