Categories
தேசிய செய்திகள்

“இணையத்தில் விருப்பமில்லை” என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லை – பிரபல ஹாலிவுட் இயக்குனர்…!!

தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது கிடையாது என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஆவார். இவருடைய படத்திற்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளியான டெனெட் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் நோலன் மெமண்டோ, தி டார்க் நைட் மற்றும் இன்சப்ஷன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய நோலன், தான் ஸ்மார்ட் போனே உபயோகிப்பது கிடையாது என்றும், தன்னிடம் உள்ள பிலிப் செல்போனை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அமைதியான நேரத்தில், மக்கள் இணையதளத்தில் மும்முரமாக இருக்கும் போது தான் யோசிப்பதற்காக நேரத்தை செலவிட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் இணையம் வழியாக மக்களுடன் தொடர்பில் இருப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |