Categories
தேசிய செய்திகள்

 2021 ஜனவரி 1 முதல்… அதிரடி விலை உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!

மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அதனால் விலை உயர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே போர்டு நிறுவனம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாகனங்களில் விலையை 3 சதவீதம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |