Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியா தான் இருந்தாங்க…. இப்படி பண்ணிட்டாங்களே…. இரண்டு வயது மகளை கொன்று தாய் தற்கொலை….!!

 பெற்ற  தாய் தன் இரண்டு வயது மகளை கொலை செய்துவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிவாங்கி பகோன்  என்ற பெண் வசித்து வந்தார். அவரது குழந்தை சியானா  பகோன் (2) .சிவாங்கி என் ஹை சேஸ் என்ற ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்து  நிபுணரின் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று சிவாங்கி தனது மகளை கொன்று அவரும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து  தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது தாய் மற்றும் மகள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவர். மேலும் சிவாங்கி அவரது குழந்தைக்கு நல்ல தாயாக இருந்து வந்தார் எனவும், தன் வாழ்க்கையை தனது மகளுக்காகவே  அர்பணித்துள்ளார் என்று  கூறியுள்ளனர் மேலும்   சிவாங்கி தன்  தாய் மற்றும் மகளுடன் தான் வாழ்ந்து வந்தார். அவருக்கு கணவர் இருக்கிறாரா என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும்   வேறு எவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை  என்றும் தெரிவித்தனர்.

Categories

Tech |