Categories
மாநில செய்திகள்

நம்மை கடந்தொழியும் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே நலம் – வைரமுத்து டுவிட்…!!

கொரோனா காலம் முடியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய நிலையில் சமீபத்தில் கலோரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் கொரோனா தோற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை கழகத்திலும் ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை பயிலும் மாணவர்கள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், “கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” என்றும், இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |