Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல்… டாப் 10-ல் இடம்பெற்ற 3 தமிழ் படங்கள்…!!

ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானது .இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளது .

LetsOTT GLOBAL on Twitter: "#This2020: Top 10 most watched direct OTT  releases in India. - Dil Bechara. - Soorarai Pottru. - Ludo. - Laxmii. -  Gunjan Saxena. - Khuda Hafiz. - Gulabo

அதில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 2-வது இடத்திலும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ 8-வது இடத்திலும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ 10-வது இடத்திலும் உள்ளன‌. மேலும் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படமான ‘தில் பேச்சரா’ படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹிந்தி படங்களான லுடோ 3-வது இடத்தையும், லட்சுமி  4-வது இடத்தையும், குஞ்சன் சக்சேனா 5-வது இடத்தையும் , குதா ஹாபிஸ் 6-வது இடத்தையும் ,குலாபோ சித்தாபோ7-வது இடத்தையும் மற்றும் ஒன்பதாவது இடத்தில் தெலுங்கில் நானி நடித்த ‘வி’ படமும் இடம்பெற்றுள்ளது .

Categories

Tech |