கணவர் ஒருவர் சூதாட்டத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசிக்கும் தம்பதிகள் ரவி – ஆஷா. ரவி சூதாட்டத்திற்கு அடிமையானவர் ஆவார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதற்குக் காரணம் ரவியின் குடிப்பழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான ரவி தன்னுடைய மனைவி ஆஷாவை பந்தயம் வைத்து விளையாடியுள்ளார்.
அப்போது தன்னுடைய நண்பர்களிடம் மனைவியை இழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில், “ரவி சமீபத்தில் சூதாட்டத்தின் போது தன்னுடைய மனைவியை பந்தயம் கட்டி தன் நண்பர்களிடம் இழந்துள்ளார். இதனால் தன்னுடைய மனைவி தன் நண்பர்களுடன் செல்ல மறுத்துள்ளார்.
எனவே ரவி தன்னுடைய மனைவி மீது ஆசிட் வீசி தாக்க முயன்று, தன் நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்ய அனுபியுள்ளார். இதனால் அந்தப் பெண் தன்னுடைய கணவனின் வீட்டில் இருந்து தப்பித்து பெற்றோர் வீட்டிற்கு சென்று தீபக் சிங் என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தான் கருத்தரிக்க முடியாததால் ரவி தன்னை உடல் ரீதியாக சித்ரவதை செய்ததாக ஆஷா காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.