Categories
சென்னை மாநில செய்திகள்

நீட் மதிப்பெண் முறைகேடு…. டிமிக்கி கொடுத்த மகள், தந்தை…. போலீஸ் மீண்டும் சம்மன் …!!

நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக இருவரும் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பெரியமேடு காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் மாணவி தீட்சா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை இரண்டாவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Categories

Tech |