Categories
தேசிய செய்திகள்

அப்பா ஜெயிலில்…. விட்டுப்போன அம்மா…. நடைபாதையில் நாயுடன் உறங்கும் சிறுவன்…!!

சிறுவன் ஒருவன் தாய் மற்றும் தந்தை இல்லாததால் நாயுடன் நடைபாதையில் உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் சிறுவன் ஒருவன் பிளாட்பாரத்தில் நாயுடன் உறங்கி கொண்டிருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை கண்டு தங்கள் கருத்துக்களை மனமுருகி பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறுவனுடைய அப்பா ஜெயிலில் இருப்பதாகவும், அம்மா விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சசிறுவனின் பெயர் அன்கித். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத காரணத்தால் சிறுவன் நடைப்பாதையில் நாயுடன் படுத்து உறங்கி வருகிறான்.

இந்த நாயின் பெயர் டேனி என்றும், இது தான் சிறுவனின் நண்பன் என்று கூறப்படுகிறது. பலூன் விற்பது மற்றும் தேநீர் கடையில் வேலை பார்த்தும் வரும் அன்கித் தனது நண்பன் டேனியுடன் ஒரே போர்வைக்குள் படுத்து உறங்கி கொண்டிருக்கும் புகைப்படம், இம்மாத ஆரம்பத்தில் இருந்து நெட்டில் பரவ ஆரம்பித்தது.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக துவங்கியதும் கார்ப்பரேஷன் அந்த சிறுவனை தேட ஆரம்பித்துள்ளது. ஒருவழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் அன்கித் முசாபர் நகர் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவனின் வயது 9 அல்லது 10 இருக்கும் என கூறப்படுகிறது. அன்கித் வேலை செய்து வரும் டீ கடை உரிமையாளர் மூலம் சிறுவனை கண்டுபிடித்துள்ளனர். சிறுவன் வேலை செய்து முடிக்கும் வரை கடையின் ஓரத்தில் நாய் அமர்ந்திருக்கும் என கூறி இருக்கிறார்.

தற்போது சிறுவன் அன்கித் முசாபர் நகர் காவலர்கள் ஆதரவில் இருக்கிறான். சிறுவனை கோட்வாலி நகர அதிகாரி அணில், சிறுவன் அன்கித் ஷீலா தேவி எனும் பெண்ணிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளார். ஷீலா தேவி அன்கித் வசித்து வரும் பகுதியில் இருப்பவர் என கூறப்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு தகுந்த கல்வி மற்றும், குடும்பத்தை கண்டறிய நகர அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தனியார் கல்வி ஒன்று நகர போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, சிறுவனுக்கு இலவச கல்வி அளிக்க முன்வந்துள்ளது.

Categories

Tech |