தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலையடுத்து இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இதுவரை சுமார் நுற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் துயரில் இருந்து இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் இலங்கை நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் ஜெய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.