Categories
கல்வி மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு… 35% பாடங்கள் குறைப்பு… அமைச்சர் செங்கோட்டைன்..!!

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதால் 35% குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை முதல்வருடன் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் அரையாண்டுதேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |