Categories
உலக செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா…? கவலையா இருக்கு… புலம்பும் அதிபர்….!!

கொரோனா பாதிப்பால் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். 

ஜெர்மனியில் நோய் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும்  952 பேர் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  கடந்த வெள்ளிக்கிழமையன்று 598 பேர்  உயிரிழந்துள்ளதே அதிகமாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள்            13 லட்சத்து 79 ஆயிரத்து 238 பேர் ஆவர். மேலும்   23 ஆயிரத்து 427 பேர் மரணமடைந்துள்ளனர்.

இது  முன்பிருந்த நிலையை விட மிகவும் அதிகரித்துள்ளதால், இதனை கட்டுப்படுத்த இன்று ஜெர்மனியில் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இது ஜனவரி 10-ஆம் தேதி வரை தொடரப்போவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இவ்வாறு கொரோனா அதிகரித்து வருவது கவலை தருவதாகவும் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |