Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… வசமாக மாட்டிக்கொண்ட 25 பேர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

15 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் 15 வயது மட்டுமே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள் என இவ்வழக்கில் ஏராளமானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பின் ஒருவராக சங்கிலித் தொடர்போல்  அடுத்தடுத்து கைதாகினர். இந்த வழக்கிற்காக தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.  தீவிர விசாரணைக்குப் பின் பாஜக பிரமுகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 23 பேர் சிக்கி கொண்டனர். அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து சிறையில் இருந்த விபசார தரகர்கள் அளித்த தகவலின் பேரில் மற்றொரு விபசார தரகரான  திருவேற்காடு பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கஸ்தூரி என்கின்ற அனிதாவை போலீசார் அழைத்து விசாரித்தனர். இதை அடுத்து அவரிடம் விசாரித்தபோது அந்தச் சிறுமியை குரோம்பேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற மனோதத்துவ  மருத்துக் கல்லூரி பேராசிரியர் ராஜசுந்தரம்(62) என்பவருக்கு விருந்தாக அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து தகவல் தெரிந்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததால் பேராசிரியர் ராஜதந்திரத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்த பெண் விபசார தரகர் அனிதாவையும் போக்சோ சட்டத்தின்படி கைது செய்து சிறையில் போட்டனர். இதையடுத்து இவ்வழக்கில் இதுவரை 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து மேலும் சில ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளையும் மற்றும் சில போலீசாரையும் கைது செய்யப்படும் என்றும் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |