Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பால் ஜெயிக்க முடியும் என நினைத்தேன்… மனமுடைந்து கதறி அழும் அர்ச்சனா… வெளியான மூன்றாவது புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இதில் கோழி ,நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும் நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் .

இந்த டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகியிருந்தது . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் சோம் மற்றும் அர்ச்சனா இடையே நடந்த மோதலால் மனமுடைந்த அர்ச்சனா கன்பெக்சன் அறையில் கதறி அழுகிறார் . மேலும் அவர் ‘இந்த வீட்டில் அன்பால் ஜெயிக்க முடியும் என நினைத்து வந்தேன் ஆனால் பயமாக இருக்கிறது’ என்கிறார்.

Categories

Tech |