இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் ஆனது ஏற்கனவே உள்ள வைரஸை விட வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது இங்கிலாந்திற்கு வந்த ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் மூலமாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்புதிய வைரஸின் அமைப்பானது வித்தியாசமாக உள்ளது எனவும் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இதனை அடையாளம் காண்பது கடினம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி இப்போதைய புதிய கொரோனா வைரசிற்க்கு எதிராக பலனளிக்காமல் போக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.