பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் ,சேரன் இயக்கிய ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இந்தப்படத்தில் வரும் துபாய் காமெடியில் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இதையடுத்து தளபதி விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கண்ணப்பன் கதாபாத்திரத்தில் விஜய்க்கு நண்பனாக சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.