தமிழகம் முழுவதும் 33 அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவிக்கிறது. 127 அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதேபோல புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் 62 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.