விவாகரத்து வழங்குவதில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் விவாகரத்து பெறும் போது மதம், பிறந்த இடம், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் பின்பற்ற படுவதாகவும்; இதனை நீக்கிவிட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.