மதுவிற்கு அடிமையான டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது . இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டின் பின்புறம் சென்று தூக்குப்போட்டு கொண்டார் . இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.