கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1). இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர் கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த கேமரா காட்சிகளை ஹோட்டல் ஊழியர்கள் காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர். இதை சாட்சியாக வைத்து குழந்தையை கொன்றதாக முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் “என் குழந்தையை நான் கொல்லவில்லை என்றார். மேலும் எனக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் குழந்தை மீது அடிபட்டது அதனாலேயே குழந்தை இறந்துவிட்டது” என கூறினார். வீடியோவை சாட்சியாக வைத்து கைது செய்து விட்ட நிலையில் மதினா அவர் கூறிய சாட்சியிலிருந்து பின் வாங்கியுள்ளார். அதாவது என் குழந்தையை கணவர் கொன்றார் என்று தன்னால் நம்ப முடியவில்லை அவர் என் குழந்தையை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மாற்றி கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மோகமத் மீதுள்ள குற்றத்தை நிரூபித்தால் இருபது வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.