நடிகர் ஆதி நடித்துள்ள ‘கிளாப்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளில் எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து ஈரம் ,அரவான், கோச்சடையான், மரகதநாணயம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.இந்நிலையில் தற்போது நடிகர் ஆதி தடகள வீரராக நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் ஆகன்ஷ்கா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் .
It's a wrap for #CLAP! This journey is close to my heart…. Now bringing it close to your 🤍 pic.twitter.com/RFSdk4SD9M
— Aadhi🎭 (@AadhiOfficial) December 16, 2020
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது . இதை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் நடிகர் ஆதி இறுதிகட்ட சூட்டிங் நாளில் எடுத்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . இதன்பின் படக்குழுவினர் டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடக்சன் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளனர்.