மகரம் ராசி அன்பர்களே…! வருமானம் இருமடங்காக இருக்கும்.
திருப்தி தரும் வகையில் இருக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அலைப்பேசி வழி தகவலால் மகிழ்ச்சி கொள்வீர்கள். அனுகூலமான நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செழிப்பாக வளரும். சில விஷயங்களில் மந்தமான நிலை இருந்தாலும் கவலை வேண்டாம். பணம் வருவது தடைபட்டாலும் நல்ல முறையில் வந்து சேரும். நண்பர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். சக ஊழியர் உங்கள் மீது பாசம் கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. கொஞ்சம் நிதானத்துடன் நடக்க பாருங்கள். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல.
கணவன்-மனைவி இடையே அன்பு அதிகமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லதை தரும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.