Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…!வாக்கு காப்பாற்றுவீர்…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! முயற்சியில் வெற்றி கிடைத்து முன்னேறும் நாளாக இருக்கும்.

உடன் பிறப்பால் கிரயம் கொஞ்சம் உருவாகும். நல்ல தகவல்கள் வீடு வந்து சேரும். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு பெரும் அறிகுறி தோன்றும். உங்கள் மீது மற்றவர் கோபப்பட முடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை கொஞ்சம் குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். வீண்பழி நீங்கும். அக்கம்பக்கத்தினர்  ஒத்துழைப்பு இருக்கும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றும் காட்டுவீர்கள். குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும்.தேவையில்லாத நண்பர்களுக்கு கூட தேவையானதை செய்து கொடுப்பீர்கள்.

கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |