Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் பட்ட துன்பத்தை விட , அதில் நான் பெற்ற அனுபவமே சிறந்தது’… பிக்பாஸிலிருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா பதிவிட்ட வீடியோ…!!

பிக்பாஸிலிருந்து கடந்தவாரம் வெளியேறிய அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்தவாரம் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டியின் ஆரம்பத்தில் நகைச்சுவை உணர்வோடு காணப்பட்ட நிஷா , அர்ச்சனா வருகையின் பின் அவரது விளையாட்டில் மாறுபாடு தெரிந்தது . மேலும் அவர் அர்ச்சனா மற்றும் ரியோ சார்பாக தான் விளையாடுவதாகவும், போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும் மக்கள் கருதி வந்தனர்.

Bigg Boss Tamil Elimination: Bigg Boss 4 Highlights: நிஷா எலிமினேஷன், அன்பு  கேங்கை விளாசி எடுத்த கமல் - bigg boss tamil season 4 day 70 written  updates: nisha eliminated, kamal slam rio and archana | Samayam Tamil

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘எனக்கு பிக்பாஸ் வீட்டில் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி . நான் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு ஆதரவு தந்தீர்கள் .தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்’ என கூறி கேப்ஷனாக ‘நான் பட்ட துன்பத்தை விட அதில் நான் பெற்ற அனுபவமே சிறந்தது’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |