கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறும் ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றை சமாளிக்க நிவாரண உதவிகளை பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வருகின்றனர். மத்திய வருவாய்த் துறையால் இந்த நிதியத்தை அரசு அறக்கட்டளையாக பதிவு செய்துள்ள நிலையில் பி.எம்.கேர்ஸ் இணையதளத்தில் அதனை அரசு அறக்கட்டளை என குறிப்பிடவில்லை. இதனிடையே பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில சமூக ஆர்வலர் அனு பூயான் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தின் படி பி.எம்.கேர்ஸ் நிதியமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலோ அல்லது எந்த ஒரு மாநில அரசின் கட்டுப்பாட்டிலோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.