Categories
மாநில செய்திகள்

“தெருவோர குழந்தைகள் கிரிக்கெட்” வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்…!!

சர்வதேச அளவிலான நடைபெற்ற  தெருவோர குழந்தைகள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெருவோர குழந்தைகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்  லண்டனில் நடைபெற்றது. இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில்  தென்னிந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதில் தொண்டு நிறுவனத்தின்  உதவியுடன் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் ஆட சென்ற சென்னையை சேர்ந்த சூரிய பிரகாஷ், பால்ராஜ், நாகலெட்சுமி, மோனிசா ஆகியோர் தென்னிந்திய அணியில் பங்கேற்றிருந்தனர்.

இதில் வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதில் அவர் , லண்டனில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் , அணியில் வெற்றிக்கு வித்திட்ட சென்னையை சார்ந்த நால்வருக்கும் வாழ்த்துகள்! உங்கள் சாதனைகள் தொடர திமுக துணை நிற்கும்! என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |