Categories
மாநில செய்திகள்

ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி…. TNPSC தேர்வு – அறிவிப்பு…!!

தொழில் மற்றும் வர்த்தகம் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு வரும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கும் என்று TNPSC தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தொழில் மற்றும் வர்த்தகம்(தொழில்நுட்பம்) உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (ரசாயன பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கு ஜனவரி 9 மற்றும் 10 தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்திகளை அனைவருக்கும் அறிய ஷேர் செய்ய வேண்டும்.

Categories

Tech |