Categories
மாநில செய்திகள்

மத்திய அரசே!! சிலிண்டர் விலை உயர்வை…. திரும்ப பெறு – டிடிவி வலியுறுத்தல்…!!

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெறுமாறு அமமுக பொது செயலாளர் டிடிவி வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டரின் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது. அடுத்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை ஆனது. இதையடுத்து சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்தது.

இதற்கிடையில் இந்த மாதம் முடிவதற்குள் மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.660 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல. 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்தி இருப்பது ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |