Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் விதவிதமான…. கிறிஸ்துமஸ் குடில்கள்…. விற்பனை அமோகம்…!!

தூத்துக்குடி பகுதியில் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளன்று மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வழங்கியும் கொண்டாடுவார்கள். மேலும் கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிடுவதும், கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாற்றுக்களால் ஆன குடில், ஓட்டுக் குடில், ஓலைக் குடில் என்று முக்கால் அடி முதல் 6 அடி வரை உயரம் உடையதாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து கிறிஸ்துமஸ் குடில் தயாரித்து விற்பனை செய்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த கனகராஜ் கூறுகையில், “கடந்த 2007-ம் வருடம் முதல் கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் விதவிதமான குடில்களை செய்து வருகிறேன். இந்த வருடம் பனை ஓலை, நாற்று வைத்து குடில் தயாரித்திருக்கிறேன். இந்த குடில்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்தலாம். இது வேம்பு, அத்தி மற்றும் ஆலமர பலகைகள் மூலம் தயாராகிறது. இன்னும் சில தினங்களில் அதிகமாக விற்பனையாகும்” என்று கூறினார்.

Categories

Tech |