Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்… எளிதில் செய்யக்கூடிய… அருமையான சட்னி..!!

முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

முள்ளங்கி                       – அரை கிலோ
பெரிய வெங்காயம்    – 1
காய்ந்த மிளகாய்         – 3
தக்காளி                            – 1
கறிவேப்பிலை              – 1 கீற்று
புளி                                      – சிறிதளவு
உளுத்தம் பருப்பு          – ஒரு கைப்பிடி
பூண்டு                                – 6 பல்
கடுகு                                   – தாளிக்க
எண்ணெய்                       – சிறிதளவு

செய்முறை:

முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு தக்காளி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் நறுக்கிய முள்ளங்கி துண்டுகள், தக்காளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்சிஜாரில் வதக்கி வைத்த  கலவை, உப்பு, புளி  போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்ததும், அதனுடன் அரைத்த  கலவையை போட்டு,  பச்சை வாசனைபோகும் வரை நன்கு கிளறியபின் இறக்கியதும்  இட்லி, தோசையுடன் பரிமாறினால் ருசியான முள்ளங்கி சட்னி ரெடி.

Categories

Tech |