கடாய் பன்னீர் செய்ய தேவையான பொருட்கள் :
பன்னீர் – 250 கிராம்
இஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக் கீரை – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், பன்னீரை நீளத்துண்டுகளாகவும், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு பூண்டு, இஞ்சியை எடுத்து தோல் நீக்கியதும், துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
அதனை அடுத்து காய்ந்த வெந்தய கீரையை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளித்ததும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
மேலும் அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபின், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியில் கொதிக்கின்ற கலவையில், நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறியதும், அரைத்த வெந்தயக் கீரையை பொடியை போட்டுசேர்த்து நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் வரை கிளறியதும், கொத்தமல்லி தழையை தூவியதும் இறக்கி பரிமாறினால் ருசியான கடாய் பன்னீர் தயார்.