Categories
மாநில செய்திகள்

எங்களை பார்த்து எதிர்க்கட்சி மட்டுமல்ல…. “கொரோனாவுக்கும் பயம்” -அமைச்சர்…!!

கொரோனாவுக்கே அதிமுக கட்சியை பார்த்து பயம் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக கட்சியினர் திமுக கட்சியினரையும், திமுக கட்சியினர் அதிமுக கட்சியினரையும் குறை கூறி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தனி கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து பிரபல நடிகரான பார்த்திபனும் கட்சியில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கப்போகிறது என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

இந்நிலையில் அதிமுகவினர் தங்களை பெருமையாக கூறிக்கொண்டு வருகின்றனர். முதல்வரை பார்த்து எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கே பயம்தான். நாடி பிடித்து மருத்துவர்கள் நோயை அறிவது போல மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் முதல்வர் பழனிசாமி இந்தியாவின் சூப்பர் பாஸ்ட் முதல்வராக இருக்கிறார் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஆட்சியை பார்த்து புரெவி புயல் யுடர்ன் அடித்து சென்றதாக மற்றொரு அமைச்சர் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |