அமெரிக்காவில் ஒரு ஓட்டல் நிறுவனத்தில் உணவு சாப்பிட வந்த ஒருவர் 3 லட்சம் டிப்ஸாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ப்ரூமால் என்ற பகுதியில் ‘ஆண்டனிஸ் அட் பிக்ஸான் ஹாலோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட உணவிற்கான பணம் போக சிறிய அளவு டிப்ஸ் என்ற பெயரில் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் வழங்க விரும்பினால் அதை இவ்வாறு தருவார்கள். இப்படியாக கடந்த 12ஆம் தேதி அந்த உணவகத்திற்கு வந்த முகம் தெரியாத நபர் ஒருவர் சுமார் 205.94 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளார்.
பொதுவாக டிப்ஸ் என்றால் பில் தொகையில் இருந்து 5 முதல் 10 சதவீதம் வரை வழங்குவார்கள். ஆனால் இவர் பில் தொகையுடன் டிப்ஸ் 5000 டாலர் வழங்கியுள்ளார். இந்திய தொகையில் 3.60 லட்சம். இந்த சம்பவத்தினை அந்த நிறுவனம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஊழியருக்கு உதவி செய்த வாடிக்கையாளருக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பணத்தை பெற்ற சர்வடி ஏஞ்சலோ என்ற பெண் கூறுகையில்: “நான் படித்துக் கொண்டே தான் இந்த நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றுகிறேன்.
இவ்வளவு பெரிய தொகையை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த தொகையை நான் எனது கல்வி செலவிற்காக பயன் படுத்த உள்ளேன். மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உதவலாம் என்று இருக்கிறேன்” என்று கூறினார். ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு 3.60 லட்சம் பரிசு வழங்கியவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.