பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் காலகட்டத்தில் உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கொடூரமான ஆண்கள் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில் அமைச்சரவை நிறைவேற்றிய பாலியல் வன்கொடுமை தடுப்பு அவசர சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார். ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.