கடலை பணியாரம் செய்ய தேவையான பொருள்கள் :
தேங்காய் – 1
பொட்டுக்கடலை – 300 கிராம்
சர்க்கரை – 180 கிராம்
முந்திரி – 80கிராம்
மைதாமாவு – 300 கிராம்
உப்பு – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
முதலில் தேங்காயை முக்கால் பகுதி துருவிக்கொண்டு கால்பகுதி பால் எடுக்கவேண்டும் . இப்பொழுது பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
அதன் பின் சீனியை தூளாக்கவேண்டும் .முந்திரியை நெய்யில் வறுத்து பொடிபொடியாக நறுக்கவேண்டும் . மைதாவில் தேங்காய்ப்பால், உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
பிறகு தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை, முந்திரி, சீனி, ஏலக்காய்தூள் எல்லாம் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும் .
பின்பு இப்பொழுது ஒரு மணிநேரம் கழித்து உருண்டைகள் பிடித்து மைதாவில் நனைத்து பொரிக்கவும்.