மதுரவாயில் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரவாயல் அருகே துண்டலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி என்பவரின் மகள் அஸ்வினி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பிரகாஷ் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினியில் வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மன வருத்தத்தில் இருந்த அஸ்வினி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உயிரிழந்த சோகத்தில் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.