கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் என்ற க்னுப் போவின் என்னும் ஊழியர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கழிவறையின் கூரையை பிய்த்துக்கொண்டு ஒரு எட்டு அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனால் போவின் அலறியடித்துடன், அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு அந்த பாம்பை நிதானமாக படம்பிடித்துள்ளார். பின்பு ஓடி சென்று அங்கிருந்த சக ஊழியர்களை அழைத்து கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அவர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் வருவதற்குள் 8 அடி நீளமுள்ள தொங்கிக்கொண்டிருந்த பாம்பு காணாமல் போயுள்ளது. இதையடுத்து பாம்பு கழிவறையில் தொங்கிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் பாம்பு இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் இந்த பாம்பாக இருக்கக் கூடும் என்று கருதப்பட்டு வருகிறது.
Huge python smashes through a toilet ceiling at a restaurant pic.twitter.com/UGdC77vjwL
— The Sun (@TheSun) December 15, 2020