Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 மாசம் தான் ஆகுது”அதுக்குள்ள இப்படி நடந்திருச்சு… மனமுடைந்த இளம்பெண்ணின் விபரீத முடிவு..!!

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவருடைய மகள் அஸ்வினி(21) நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் அழைத்துள்ளார் . அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதறிய அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அருகே உள்ள தங்களுடைய உறவினர்களுக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது அஸ்வினி தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அஸ்வினிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |