டெல்லியில் நடக்கும் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது.
சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு இருக்கின்றது. அதனால் வரும் 19ஆம் தேதிக்கு பிறகுதான் பொதுவெளியில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என்று தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த காரணத்தை சுட்டிக் காட்டி நாளை வள்ளுவர் கோட்டத்தில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதில், மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்று காவல்துறை கணித்துள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு கொரோனா இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக தங்கபாலு பங்கேற்கிறார். இடதுசாரி கட்சிகள் சார்பாக அந்த கட்சியின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
அதே போல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார். ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய ஒரு மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.