டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவலத்தை பொறுக்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்று வாரமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவலத்தை பொறுக்க முடியவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, அரியானாவின் கர்ணல் மாவட்டத்தை சேர்ந்த சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.