Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் உலாவரும் தலையில்லா மனிதன்… நல்லா கிளப்புறீங்கயா பீதிய… வைரலாகும் வீடியோ..!!

சென்னையில் ஹலோ மேன் படத்தில் வரும் தலையில் மனிதன் போன்று வேடமிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் சமூக ஆர்வலர் மதன்குமார்.

இவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திகள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் இருந்து சென்னை டி நகர் வரை இரு சக்கர வாகனத்தில் ஹாலோ மேன் படத்தில் வரும் கதாபாத்திரம் போன்று தலை இல்லாமல் உடை அணிந்து வித்தியாசமான முறையில் பூக்களை கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, செல்பியும் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |