Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! 2 ஆண்டுகளாக…. பாறை இடுக்கில் தனிமை… காரணம் இது தான்…!!

நபர் ஒருவர் பெற்றோர் இறந்த விரக்தியில் பாறைகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிப்பவர் ராண்டி(35). இவருடைய பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவர் பெற்றோரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த இவர் யாருக்கும் தெரியாமல் காட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளியில் சென்று தங்கியுள்ளார். பல காலங்களாக அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த விரக்தியால் யாருடனும் பேச மறுத்து வந்த ராண்டி  தனிமையில் வாழ விரும்பியுள்ளார்.

இதனால் இவர் நாட்கள் செல்ல செல்ல காடுகளில் உள்ள பாறைகளில் வாழ்ந்து வந்துள்ளார். ஊர் மக்கள் சிலர் எப்படியோ இவரை தேடி கண்டுபிடித்து சாப்பிட உணவு கொடுத்து வந்துள்ளனர். மேலும் ஊர் மக்கள், ராண்டியிடம் எல்லோரையும் போல் பொது இடத்தில் வந்து வாழ்வதற்கு வா என்று அழைத்துள்ளனர். ஆனால் ராண்டி தான் வரவில்லை என்று கூறி மறுத்துள்ளார். மேலும் நான் வெளி உலகத்திற்கு வந்து வாழ விரும்பவில்லை என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் ராண்டியின் இந்த வினோதமான முடிவு குறித்து அப்பகுதி மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |