நடிகர் சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் நிஜ கைதிகளை நடிக்க வைக்கதிட்டமிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம் ,கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன், பிந்துமாதவி நடிக்கவுள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் இயக்குனர் அனீஸ் கூறுகையில் ‘படத்தின் டைட்டில் பாரதியார் கவிதைகளில் இருந்து எடுத்தோம் , இந்த தலைப்பு கதைக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் . இதையடுத்து இந்த படத்தில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தில் நடித்த சதீஷ் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்தப்படம் கைதிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதால் உண்மையான கைதிகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம் . ஏற்கனவே கைதிகளாக இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.